Tuesday, January 25, 2022
Homeசென்னைஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 6 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக கூறி, அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

சென்னை ஆயிர்ம் விளக்குப் பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலும், அண்ணா நகர் மேற்கில் உள்ள விஜய பாஸ்கரின் முன்னாள் உதவியாளர் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விஜய பாஸ்கரின் உதவியாளரின் நந்தனம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்பானவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் மட்டும் 30 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.  

ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக (AIADMK) ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக பணியாற்றிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் (MR Vijayabhaskar).  2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.

அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி சேர்த்ததாக, விஜய பாஸ்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ரொக்கப்பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கும் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்டுள்ள சோதனைகள், மேலும் பல விஷயங்களை தெளிவுபடுத்தலாம், மற்றும் மேலும் பல பண மோசடி விவகாரங்கள் அம்பலமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments