Tuesday, January 25, 2022
Homeஹாக்கிஇந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சி: புரோ ஹாக்கியில் பங்கேற்பதால் | FIH Pro League Hockey, India...

இந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சி: புரோ ஹாக்கியில் பங்கேற்பதால் | FIH Pro League Hockey, India Women Qualified, Rani Rampal

பெங்களூரு: புரோ லீக் ஹாக்கி தொடருக்கு முதன்முறையாக தேர்வானதால் கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி 3வது சீசன் வரும் அக். 13 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 19 வரை நடக்கவுள்ளது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து என, 9 அணிகள் பங்கேற்க தகுதி பெற்றிருந்தன. கொரோனா பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இத்தொடரில் இருந்து விலகின. இவ்விரு அணிகளுக்கு மாற்றாக இந்தியா, ஸ்பெயின் அணிகளை எப்.ஐ.எச்., தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பெண்கள் அணி முதன்முறையாக இத்தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு இந்திய வீராங்கனைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘‘புரோ லீக் தொடரில் முதன்முறையாக பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. இது, பெண்கள் ஹாக்கியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். இதுபோன்ற வாய்ப்புகளுக்காக நாங்கள் எதிர்நோக்கி காத்திருந்தோம். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டில் சாதிக்க இத்தொடர் சிறந்த பயிற்சியாக இருக்கும். இதில் கிடைக்கும் அனுபவம், போட்டிகளில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக செயல்பட உதவும்,’’ என்றார்.

 

இதேபோல ஷர்மிளா தேவி, கோல்கீப்பர் சவிதா, மோனிகா உள்ளிட்டோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments