Homeகிாிக்கெட்இலங்கை இமாலய வெற்றி: விண்டீஸ் அணி ஏமாற்றம் | Windies, First Test Cricket, Sri...

இலங்கை இமாலய வெற்றி: விண்டீஸ் அணி ஏமாற்றம் | Windies, First Test Cricket, Sri Lanka

காலே: விண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 187 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 386, விண்டீஸ் 230 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, 4ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து திணறியது.

 

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணியின் பான்னர், ஜோஷுவா டா சில்வா அரைசதம் கடந்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது லசித் எம்புல்டெனியா ‘சுழலில்’ ஜோஷுவா (54) சிக்கினார். ரகீம் கார்ன்வல் (13) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய எம்புல்டெனியா பந்தில் ஜோமல் வாரிகன் (1), ஷனான் கேப்ரியல் (0) அவுட்டாகினர்.

 

இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 160 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பான்னர் (68) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் எம்புல்டெனியா 5, ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை அணி 1–0 என, முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை இலங்கை கேப்டன் கருணாரத்னே வென்றார்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments