Tuesday, January 25, 2022
Homeஹாக்கிஓய்வை அறிவித்தார் சுனில்: சர்வதேச ஹாக்கியில் இருந்து | SV Sunil, Hockey, India, Retirement

ஓய்வை அறிவித்தார் சுனில்: சர்வதேச ஹாக்கியில் இருந்து | SV Sunil, Hockey, India, Retirement

புதுடில்லி: இந்தியாவின் சுனில், சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி. சுனில் 32. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர், 2007ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்தார். மொத்தம் 264 போட்டிகளில், 72 கோல் அடித்துள்ள இவர், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (2011), ஆசிய விளையாட்டு (2014), ஆசிய கோப்பை (2017) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தவிர இவர், காமன்வெல்த் விளையாட்டு (2014), சாம்பியன்ஸ் டிராபியில் (2016, 2018) வெள்ளி வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருபிந்தர் பால் சிங், பிரேந்திர லக்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.

 

இதுகுறித்து சுனில் கூறுகையில், ‘‘இது கடினமான முடிவு. ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்காக விளையாடியது சிறப்பு. பாரிஸ் ஒலிம்பிக் (2024) போட்டிக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. ஒரு சீனியர் வீரராக, இளம் வீரர்களுக்கு வழிவிடும் பட்சத்தில் சிறந்த அணியை தயார் படுத்தலாம்,’’ என்றார்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments