Homeகிாிக்கெட்சிறந்த வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்: ‘பிக் பாஷ் லீக்’ தொடரில் | Harmanpreet Kaur, Women...

சிறந்த வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்: ‘பிக் பாஷ் லீக்’ தொடரில் | Harmanpreet Kaur, Women Big Bash League, Player Of The Tournament, Cricket

மெல்போர்ன்: ‘பிக் பாஷ் லீக்’ தொடரின் சிறந்த வீராங்கனைக்கான தொடர் நாயகி விருதை இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச் சென்றார்.

ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 8 பேர் விளையாடுகின்றனர். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் இந்திய ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளையாடுகிறார். ‘ஆல்–ரவுண்டரான’ இவர், லீக் சுற்றில் பங்கேற்ற 11 இன்னிங்சில், 3 அரைசதம் உட்பட 399 ரன் (சராசரி 66.50, ‘ஸ்டிரைக் ரேட்’ 135.25) குவித்துள்ளார். பவுலிங்கில் 15 விக்கெட் (எகானமி 7.46) சாய்த்தார். அதிக சிக்சர் (18) அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

 

இத்தொடரின் சிறந்த வீராங்கனைக்கான தொடர் நாயகி விருதை ஆடுகள அம்பயர்கள் தேர்வு செய்வர். ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைக்கு 1, 2, 3 என ஓட்டு வழங்குவர். இதன்படி 31 ஓட்டுகளை பெற்று முதலிடம் பிடித்த ஹர்மன்பிரீத் கவுர், இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார். இதன்மூலம் ‘பிக் பாஷ் லீக்’ அரங்கில், தொடர் நாயகி விருது வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இவரை அடுத்து, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் சோபி டெவின், பெத் மூனே தலா 28 ஓட்டு பெற்றனர்.

கடந்த சீசனில் மெக் லானிங், பெத் மூனே, சாட்டர்த்வைட், எல்லிஸ் பெர்ரி, சோபி டெவின் (2 முறை) இவ்விருது வென்றிருந்தனர்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments