Homeஇந்தியாமும்பை: `வயிற்றில் போதைப்பொருள் கடத்தல்; மொத்தம் 70 கேப்ஸ்யூல்கள்!’ - ரகசியத் தகவலால் சிக்கிய நபர்

மும்பை: `வயிற்றில் போதைப்பொருள் கடத்தல்; மொத்தம் 70 கேப்ஸ்யூல்கள்!’ – ரகசியத் தகவலால் சிக்கிய நபர்

வெளிநாட்டிலிருந்து மும்பை வழியாக போதைப்பொருள் கடத்திவருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பயணி ஒருவர், போதைப்பொருள் கடத்திவருவதாக விமான நிலைய புலனாய்வுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, மொசாபியா நாட்டிலிருந்து வந்த புமோ இம்மானுவேல் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதோடு விமான நிலைய எக்ஸ்ரே மெஷினில் சோதிக்கப்பட்டது. அதில் அவரது உடலில் அந்நியப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் அடைக்கப்பட்ட கேப்ஸ்யூல்களை தான் விழுங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கேப்சூல்

உடனே அவர் ஜே.ஜே.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடலிலிருந்த போதைப்பொருள் கேப்ஸ்யூல்களை வெளியில் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 70 கேப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஒரு கிலோவுக்கும் அதிகம். இந்த போதைப்பொருள் தென்னமெரிக்காவைச் சேர்ந்த கொகைன் வகையைச் சேர்ந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி.

போதைப்பொருள் கடத்தி வந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் போதைப்பொருள் கடத்தி வந்தபோது எதையும் சாப்பிடவில்லை. சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் கேப்ஸ்யூல் வெடித்துவிடும் என்று அஞ்சினார். கேப்ஸ்யூல் வெடித்தால் அதனால் உயிருக்கே ஆபத்தும் ஏற்படலாம். திங்கள்கிழமை மேலும் இரண்டு ஆப்பிரிக்க நாட்டு நபர்கள் 8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments