Tuesday, January 25, 2022
Homeஹாக்கிருபிந்தர், லக்ரா ஓய்வு: சர்வதேச ஹாக்கியில் இருந்து | Rupinder Pal Singh, Birendra Lakra,...

ருபிந்தர், லக்ரா ஓய்வு: சர்வதேச ஹாக்கியில் இருந்து | Rupinder Pal Singh, Birendra Lakra, Hockey, India, Retirement

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து இந்தியாவின் ருபிந்தர் பால் சிங், பிரேந்திர லக்ரா ஓய்வு பெற்றனர்.

இந்திய ஹாக்கி வீரர் ருபிந்தர் பால் சிங் 30. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், 2010ல் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் அறிமுகமானார். இதுவரை 223 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 4 கோலடித்த ருபிந்தர், ஜெர்மனிக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ‘பெனால்டி ஸ்டிரோக்’ மூலம் ஒரு கோலடித்து உதவினார். கடந்த 2014ல் நடந்த உலக கோப்பைக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இவர், காமன்வெல்த் விளையாட்டு (2014, வெள்ளி), ஆசிய விளையாட்டில் (2014ல் தங்கம், 2018ல் வெண்கலம்) பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

 

இந்நிலையில் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ருபிந்தர் பால் அறிவித்துள்ளார். இதுகுறித்து ருபிந்தர் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘திறமையான இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து விடை பெறுகிறேன். கடந்த இரண்டு மாதம், என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிமையான நினைவுகளை கொடுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் பதக்க மேடையில் சகவீரர்களுடன் இணைந்து நின்றது சிறந்த தருணம். கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி,’’ என, தெரிவித்திருந்தார்.

 

லக்ரா அறிவிப்பு: இதேபோல மற்றொரு இந்திய வீரர் பிரேந்திர லக்ரா 31, சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியாவுக்காக இதுவரை 201 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் (2020), ஆசிய விளையாட்டு (2014ல் தங்கம், 2018ல் வெண்கலம்), காமன்வெல்த் விளையாட்டு (2014ல் வெள்ளி), சாம்பியன்ஸ் டிராபியில் (2018ல் வெள்ளி) பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

 

காரணம் என்ன: பெங்களூருவில் அடுத்த வாரம் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் ருபிந்தர், லக்ராவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments