Tuesday, January 25, 2022
Homeகிாிக்கெட்வங்கதேசம் திணறல் ஆட்டம் * 7 விக்கெட் சாய்த்த தய்ஜுல் | Pakistan tour...

வங்கதேசம் திணறல் ஆட்டம் * 7 விக்கெட் சாய்த்த தய்ஜுல் | Pakistan tour of Bangladesh, 1 st test

சிட்டகாங்: பாகிஸ்தான்அணிக்கு எதிராக சிட்டகாங் டெஸ்டில்வங்கதேசஅணிதிணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 330 ரன்எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிஇரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்து, 185 ரன்கள் பின்தங்கி இருந்தது. அபித் அலி (93), ஷபிக் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சுழலில் தய்ஜுல் அசத்தினார். இவரது சுழலில் ஷபிக் (52), அசார் அலி (0) விரைவில் வெளியேறினார். சதம் அடித்த அபித் அலியும் 133 ரன் எடுத்து, இவரிடம் வீழ்ந்தார். அஷ்ரப் (38), ஹசன் அலி (12), நவுமன் அலியும் (8), தய்ஜுலிடம் ‘சரண்’ அடைந்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசத்தின் சார்பில் தய்ஜுல் அதிகபட்சம் 7 விக்கெட் சாய்த்தார்.

திடீர் சரிவு

முதல் இன்னிங்சில் பெற்ற 44 ரன் முன்னிலையுடன் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இம்முறை இஸ்லாம் (1), சையப் (18), நஜ்முல் (9) என மூவரையும் ஷகீன் அப்ரிதி வெளியேற்றினார். மூன்றாவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்து 83 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிதி 3 விக்டெ் சாய்த்தார்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments