Homeகிாிக்கெட்வங்கதேச வீரர் ஓய்வு | Mahmudullah, Bangladesh, Test Cricket, Retirement

வங்கதேச வீரர் ஓய்வு | Mahmudullah, Bangladesh, Test Cricket, Retirement

தாகா: வங்கதேசத்தின் மகமதுல்லா, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

வங்கதேச ‘ஆல்–ரவுண்டர்’ மகமதுல்லா 35. கடந்த 2009ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான இவர், இதுவரை 50 போட்டியில், 2914 ரன், 43 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடைசியாக, கடந்த ஜூலை மாதம் ஹராரேயில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்ற இவர், 150 ரன் விளாசினார். இப்போட்டியின் போது விரைவில் டெஸ்டில் இருந்து விடை பெறப் போவதாக தெரிவித்திருந்தார்.  தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் மகமதுல்லா, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள், ‘டி–20’ போட்டிகளில் மட்டும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

 

மகமதுல்லா கூறுகையில், ‘‘நீண்ட காலமாக விளையாடிய டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது கடினமான முடிவு. இருப்பினும் இது சரியான நேரமாக கருதுகிறேன். வெற்றி, தோல்வியின் போது என்னை ஊக்கப்படுத்திய சகவீரர்கள், பயிற்சியாளர் குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. வங்கதேசத்துக்காக டெஸ்டில் விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,’’ என்றார்.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments