Homeவிடுமுறை சமையல்Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?

]

கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?

– சுபத்ரா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“கர்ப்பகாலத்தில் எப்போதாவது ஒருசில நாள்களில் லெகின்ஸ் அணிவதில் பிரச்னையில்லை. ஆனால் அது மிகவும் டைட்டாக இல்லாமலிருப்பது பாதுகாப்பானது. அடிக்கடியும் நீண்ட நேரமும் லெகின்ஸ் அணிவதால் சிலருக்கு இடுப்புப்பகுதியைச் சுற்றி வலியும் அசௌகர்யமும் ஏற்படலாம். கால்களில் தசைப்பிடிப்பு, வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு போன்றவையும் வலியும் வரலாம். காட்டன் அல்லாத மெட்டீரியலில் தைக்கப்பட்ட லெகின்ஸ் என்றால் வியர்வையின் காரணமாக `கேண்டிடா’ என்ற சொல்லப்படும் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் அடிக்கடி வரலாம்.

லெகின்ஸ் என்றில்லை, மேல் வயிற்றை இறுக்கும்படியான எந்த உடையும் கர்ப்ப காலத்துக்கு ஏற்றதல்ல. வயிற்றைக் கவ்விப்பிடிக்கும்படியான இந்த உடைகளைத் தொடர்ந்து அணியும்போது குறைப்பிரசவ வலி வரவும் வாய்ப்பிருப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments