Tuesday, January 25, 2022
Homeதொழில்நுட்பம்Milky Way: பால்வெளியில் செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் மறைந்துவிட்டதா? காரணம்?

Milky Way: பால்வெளியில் செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் மறைந்துவிட்டதா? காரணம்?

வானியலைப் பற்றிய ஆய்வும் ஒரு நாளும் ஓய்வதில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கும் எல்லையே இல்லை. பால்வீதியில் இருந்து செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் மறைந்திருக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பெருவெடிப்பு வெடிப்புக்குப் பிறகு பால்வீதி துரிதகதியில் உருவாகத் தொடங்கியது.

விண்மீன் மண்டலத்தின் மையத்தில் வசிக்கும் மிகப்பெரிய கருந்துளையிலிருந்து (black hole) சுமார் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சூரியன் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

அடுத்தடுத்த விண்மீன் இணைப்புகள் (galactic mergers) இப்போது இருக்கும் விண்மீன் திரள்களை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

ALSO READ | ஒற்றை ரூபாய் செலவில்லாமல் விண்வெளிக்கு பயணம்!!

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் இயக்கப்படும் கையா செயற்கைக்கோள் (Gaia satellite), ஒரு புதிய பகுப்பாய்வை நடத்தியது, இது பால்வீதியில் உள்ள பெரும்பாலான விண்மீன் திரள்கள் உண்மையில் அப்பகுதிக்கு ஒப்பீட்டளவில் புதியவை என்பதைக் காட்டுகிறது.

பிரான்சில் உள்ள பாரிஸ் ஆய்வகத்தின் வானியற்பியல் விஞ்ஞானி பிரான்சுவா ஹேமர் (François Hammer) தலைமையிலான இந்த ஆய்வு, தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

“அவற்றின் சமமற்ற உயர் ஆற்றல்கள் மற்றும் கோண உந்தம் காரணமாக, பெரும்பாலான dwarfs, நீண்ட காலம் வாழும் செயற்கைக்கோள்களாக இருக்க முடியாது, மேலும் அவை பால்வீதியுடன் இணைக்கப்பட்டு 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ச்சியடைந்தன” என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

READ ALSO | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA

Sagittarius (தனுசு), பால்வெளியை விட 10,000 மடங்கு குறைவான சிறிய விண்மீன், தோராயமாக 100 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்ட நமது விண்மீனின் மகத்தான வட்டு வழியாக இரண்டு முறை கடந்து சென்றது.

இப்போது வரை, விண்மீனின் வடிவத்தைப் பற்றிய புரிதல், பால்வீதியில் உள்ள வான அடையாளங்களின் மறைமுக அளவீடுகள் மற்றும் பிரபஞ்சத்தில் வசிக்கும் பிற விண்மீன் திரள்களில் காணப்பட்ட கட்டமைப்புகளின் அனுமானங்களின் அடிப்படையில் இருந்தனா.

“பால்வீதி ஒரு பெரிய விண்மீன், எனவே அதன் அலை விசை பிரம்மாண்டமானது, ஒன்று அல்லது இரண்டு பாதைகளுக்குப் பிறகு சிறிய விண்மீன் ஒன்றை அழிப்பது மிகவும் எளிதானது,” என்று ஹாமர் தெரிவித்தார்.

ALSO READ | பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! ஒமிக்ரானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments